அடிலெய்டு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி  வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதையடுத்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையேயான 2-வது மற்றும்  கடைசி டெஸ்ட் போட்டி, நேற்று (நவ.29) துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது.  இந்தப்போட்டியின் 2 ஆம் நாளான இன்று, ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் விளாசினார்.
389 பந்துகளில் 37 பவுண்டரிகளுடன் வார்னர் 300 ரன்களை கடந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் முச்சம் விளாசுவது இதுதான் முதல் முறையாகும். ஆஸ்திரேலிய அணி 122 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 560 ரன்கள் அடித்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது.