இன்ஜினியர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு..!

இன்ஜினியர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்பு..!

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் (இஸ்ரோ) , விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச புகழ் பெற்றது.

இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்ட் பிரிவில் காலியாக இருக்கும் 80 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் : சயிண்டிஸ்ட் / இன்ஜினியர் என்ற பதவிக்கு எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 35ம், மெக்கானிக்கலில் 35ம்,

கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10ம் சேர்த்து மொத்தம் 80 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : இந்த இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 அக்., 5 அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பைக் குறைந்த பட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : ஆமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், சென்னை, கவுகாத்தி, ஐதராபாத், கோல்கட்டா,

லக்னோ, மும்பை, டில்லி, திருவனந்தபுரம் ஆகிய 12 மையங்கள் ஏதாவது ஒன்றில் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

கடைசி நாள் : 2017 அக்., 5.

விபரங்களுக்கு : www.isro.gov.in