சென்னை:

தமிழக அமைச்சரவை இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடுகிறது. பட்ஜெட் தாக்கல் தொடர்பாக, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, முதல்வர் பழனிசாமி – துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, 17ம் தேதி சென்னை திரும்பினர். எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர்கள் சிலர், சொந்த ஊர்களுக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், அரசு சார்பில், திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழா, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இன்று காலை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, மாலை, 4:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. இந்தாண்டின் முதன் அமைச்சரவைக் கூட்டம் இது.