ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு...!

இந்த ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறலாம்.

இருக்கை ஒதுக்கீடு, படிப்புகளை தோ்வு செய்வது உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சா்  விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளாா்.

நீட் தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள் மெடிக்கல் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரை வரும் நிலை உள்ளது.

மாணவர்களும் பெற்றோர்களும் சிரமப்பட வேண்டியதாக இருப்பதால் மெடிக்கல் கவுன்சிலிங்கை முழுவதுமாக ஆன்லைனில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் ( 2019-20 ) இளைநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடைபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது ‘முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான விண்ணபிக்கும் மாணவர்கள் ஆன்லையின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கும்,

தங்களுக்கு விருப்பமான படிப்பை லாக் செய்வதற்கான சாஃப்ட்வேரை தேர்ந்தெடுக்கப்பட்ட குழு பரிசோதனை செய்துவருகிறது.

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் முதுநிலை மருத்துவப்படிப்பிற்கான கவுன்லிங் ஆன்லையின் மூலம் நடைபெறுகிறது.

முதுநிலை மருத்துவப்படிப்பிற்காக குறைந்தது 10,000 விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம்’ என்று கூறினார்.