தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு...!

இந்திய அஞ்சல்துறைக்கான தமிழக அஞ்சல் வட்டத்தில் மொத்தம் 4443 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 4442 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பணி விவரங்கள் மற்றும் அதற்குரிய ஊதிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.

பணி: கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி
ஊதியம்: மாதம் ரூ. 12 ஆயிரம் முதல்- ரூ. 29,380

பணி: உதவி கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி
ஊதியம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ. 24,470

பணி: டாக் சேவக்
ஊதியம்: மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 24,470

வயது வரம்பு: அஞ்சல்துறை பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 15, 2019 தேதியன்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு , பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடியவர்கள் உள்ளூர் மொழிகளை எழுதவும் பேசவும் தெரிருந்திக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline/ என்ற உரலிக்குச் சென்று விவரங்களை படித்துப் பார்த்து பணிக்கு விண்ணப்பிக்கவும்.