சூப்பர் டீலக்ஸ்’ பட டிரெய்லர் இன்று வெளியீடு..!

தமிழ் சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும்

மார்ச் 29ம் தேதி வெளியிடப்படுவதாகவும், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில், ஆரண்ய காண்டம் பட புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ’சூப்பர் டீலக்ஸ்’.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி அது வைரலடித்த நிலையில், அதன் 2ம் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.

முதல் பார்வை போஸ்டரின் முக்கிய அம்சங்கள் சில இதிலும் இடம்பெற்றுள்ளது.

இவற்றுடன் சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29ம் தேதி வெளிவரும் என்றும், டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இப்படத்தை எதிர்நோக்கியுள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார்.

யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்,

தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல தரப்பு ரசிகர்கள் மத்தியில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.