சிவசேனை
திருக்கோணேச்சரம் அன்னதான மடம்  கட்டுமானப் பணியில் அறங்காவலர் தலைவர் திரு. அருள் சுப்பிரமணியம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது .
 
புத்தசாசன  அமைச்சின் விதிகளுக்கு அமையப் புராதன  இந்துக் கோவில்களில் திருப்பணி செய்வதற்கு அனுமதி எவரிடமும் எப்பொழுதும் பெற வேண்டியதில்லை. 
 
திருகோணமலையின் மூத்த குடிமகன்,  எழுத்தாளர், கவிஞர், படைப்பாளி திரு. அருள் சுப்பிரமணியம் அவர்கள். திருகோணமலை மாவட்ட இந்துக்களின் தலைவரும் அவரே.
 
அவர்மேல்  சட்ட நடவடிக்கை  என்பது இலங்கையில் வாழும் இந்து மக்கள் மீதான சட்ட நடவடிக்கைக்கு  ஒப்பானதாகும். 
 
திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர், திரு. இரா சம்பந்தன் அவர்கள் திருக்கோணேச்சரம் ஆலய அறங்காவலராக இருந்தவர். சிறந்த  இந்துவான அவரும் திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளார் 
 
இந்துக்கள் இலங்கையில் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை உலகெங்கும் வாழ் இந்துக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்களாக .
 
திரு அருள் சுப்பிரமணியம் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முயல்வதைச் சிவசேனை கடுமையாகக் கண்டிப்பதை மீண்டும் உறுதி செய்கிறது.  
 
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தலைவர் 
சிவசேனை