ட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…!

0
124
ட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ...!
Advertisement
Advertisement

பிஎஸ் மித்ரன்இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 15ஆவது படமான ஹீரோ டுவிட்டரில் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், யோகி பாபு, ராதிகா சரத்குமார், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் எஸ்கே15 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

மேலும், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், இவானா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் காட்பாடி ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில், ஹீரோ டைட்டில் அறிவிக்கப்பட்டவுடன் இந்தியளவில் டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. மேலும், டுவிட்டரில் 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.