10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..!

தற்போது இவர் நடிப்பில் வெளியான படம் ‘எல்.கே.ஜி.’. இந்தப் படத்திற்கு இவர்தான் கதை வசனம் எழுதியுள்ளர்.

இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நேற்று ‘எல்.கே.ஜி’ படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், இயக்குனர் பிரபு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, ‘‘இந்த படத்தின் வெற்றிக்கு கைமாறு செய்யும் விதமாக,

கஜா புயலால் பாதித்த டெல்டா பகுதிகளில் உள்ள 10 அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவுள்ளோம்’’ என்றார்..

ஆர்.ஜே.பாலாஜிக்கு, பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.