மீண்டும் டெல்டாவை தாக்கும் வானிலை..!

காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரரணமாக மறு சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மட்டுமின்றி, உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம் அணைக்கரை, நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த இரு நாட்கள் கன மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக, மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் டெல்டா மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்கிய பிறகு இன்னும் சில இடங்களில் மின் இணைப்பு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.