முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு…!

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,

இந்தியாவில் பாக்., ஐ சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்., எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதில் 350 பயங்கரவாதிகளை ஒரே நேரத்தில் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளும், பாக்.,ராணுவமும் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதால்,

டில்லி, மும்பை உள்ளிட்ட 5 முக்கிய நகரங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்கள், விமானப்படை தளங்கள், கடற்படை தளங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாக்., எல்லையை ஒட்டிய பஞ்சாப்பின் 5 மாவட்டங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடுருவல்களை தடுக்க முப்படைகளும் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் மீன்பிடிக்க சென்றுள்ள இந்திய மீனவர்களும், இந்திய எல்லைக்குள் திரும்பி வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் ஸ்லீப்பர் செல்களே இந்த தாக்குதல் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.