தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பத்திரிக்கையாளர்களையும்,

அரசியல் தலைவர்களையும் ஒருமையில் பேசியதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்ததால், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை ஒருமையில் பேச தொடங்கினார்.

மேலும், அரசியல் தலைவர்களையும் ஒருமையில் சாடும் விதமாக பேசினார். இதற்கு செய்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கேள்வி கேட்கும் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த், “ நீ எந்த தொலைக்காட்சி” என்று எதிர்கேள்வி கேட்டு பிறகு பதிலளித்தார்.

கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல், கேள்விக் கேட்ட செய்தியாளரை பார்த்து “நீ போய் கேளு” என பிரேமலதா பேசினார்.

மேலும், கொள்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கொள்கை இல்லை என உனக்கு யார் சொன்னது? என தொடர்ந்து ஒருமையில் பேசினார் .

கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட எதற்கு இழுபறி? என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த பிரேமலதா,

“செய்தியாளர்கள் 24 மணிநேரமும் தேமுதிக அலுவலக வாசலில் நிப்பீங்க, நாங்கள் பதில் சொல்லணுமா? என்று எதிர்கேள்வி கேட்டார்.

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து ஒருமையில் பேசி வந்த பிரேமலதா உடன் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.