போலீஸ் பாதுகாப்பில் பொள்ளாச்சி…!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில்,போலீஸ் பாதுகாப்பில் பொள்ளாச்சி…!

நேற்று புகாரில் சம்பந்தப்பட்ட நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பார் அப்பகுதி மக்களால் அடித்து நொருக்கப்பட்டது.

தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் புகாரளித்த மாணவியின் வீடு இருக்கும் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நகரில் முக்கிய பகுதிகள், கல்லூரி, பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட பகுதிகளில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.