மாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை...!

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை கலைக்க முயன்றதால் கல்லூரி மாணவிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டத்தை அடுத்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.