பெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் !!!

பெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்க களின் ,ஊத்துப்பட்டி ஊர் உருவான வரலாறை காண்போம் !!!

ஏழாயிரம்பண்ணை என்ற ஊருக்கு அருகில் உள்ள புல்லக்கவுண்டன்பட்டி என்ற ஊரில் வாழ்ந்த அனுப்பகவுண்டர்கள்.

சிக்கணக்கவுண்டர் வம்சாவழியினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து இப்போது உள்ள குமாரபுரம் இரயில் நிலையம் அருகில் உள்ள கரிசல்மண் பகுதியை வந்தடைந்து விவசாயம் செய்து ஆடு மாடுகள் வளர்த்து வாழ்ந்து வந்தார்கள்.

பெருமாளை வழிபடும் அனுப்பகவுண்டர்கள் அந்த காலத்திலேயே அக்காட்டுப் பகுதியில் பெருமாள் கோவிலை அமைத்து வழிபட்டு வாழ்ந்து வந்தார்கள்.

  அனுப்ப இனத்தவர்கள் நடுகல் நடும் வழக்கம் உள்ளவர்கள் நம் இனத்தில் ஒரு அச்சி(பாட்டி) இறந்ததால் அச்சிக்கு நடப்பட்ட நடுகல் இன்றும் பாட்டிஅச்சி என்ற பெயரில் உள்ளது அதை இன்னும் அனுப்பகவுண்டர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

காலம் உருண்டோடியது மன்னர் காலத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலம் அது விவசாயம் ஆடு மாடு என வாழ்ந்த அனுப்பர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி, ஆங்கிலேயர் முதன் முதலில் இப்பகுதியில் ரயில் வண்டியை சோதனை ஒட்டம் செய்தனர்.

நிலக்கரியில் இயங்கிய வண்டி புகையை கக்கி கொண்டு பயங்கர சப்தத்துடன் வந்தது இதை அறியா மக்கள் ஏதோ ஆபத்து வருகிறது என்றென்னி தங்களது பொருட்கள் ஆடு மாடு மக்கள் அனைவரும் இப்போது இருக்கும் ஊத்துப்பட்டி அப்போது மலைப்பகுதி இப்போதும் மலைக்கருகில் தான் இவ்வூர் உள்ளது.

அனுப்பர்கள் இப்பகுதிக்கு வந்து குடி புகுந்தனர் மலைப்பகுதி மின்சாரம் இல்லை சூரிய ஒளி நிலவின் ஒளியில் தான் வாழ்ந்தார்கள்.  நாட்கள் செல்ல இங்கேயே தங்கிவிட்டனர் விவசாயத்திற்காக தாங்கள் வாழ்ந்த பூமிக்கு செல்வார்கள்.

இன்றும் இவ்வூரில் அனுப்பகவுண்டர்களின் காடுகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தாங்கள் குடி புகுந்த இடத்திற்கு கவுண்டன்பட்டி என்ற பெயரிட்டனர். 

நமது குல தெய்வம் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவிலை இலந்தமுள் கோட்டை அமைத்து ஊரின் முன்னால் கோவிலை அமைத்தனர். சிக்கணக்கவுண்டர் பரம்பரையினர் தான் வாழ்ந்து வந்தனர்.

சிக்கணக்கவுண்டர் மகன் புல்லக்கவுண்டர் இவர் பெரும் நிலக்கிழார் ஆவார். இவர் ஒரு மடத்தை தன் சொந்த செலவில் கட்டி மண்ணில் அ அ இ என படிக்கும் பள்ளியாக அமைத்தார் இன்றும் அம்மடம் புல்லக்கவுண்டர் மடம் என்று அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

புல்லக்கவுண்டருக்கு 6 மகன்கள் மகள்கள் ,கணக்குப்பிள்ளை கந்தசாமிகவுண்டர் ,அப்பள்ளியின் தலைமைஆசிரியர் சிங்கராசுக்கவுண்டர் நிலாக்கிழார், இப்படி அனுப்பகவுண்டர்கள் இங்கு கொடிகட்டி வாழ்ந்து வந்தார்கள்.

சிக்கணக்கவுண்டரின் அண்ணன் தம்பி வகையறாவைச் சேர்ந்தவர் பெருமாள்கோவில் பூசாரிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் ஊத்துப்பட்டி பெருமாள் கோவிலில் அனுப்பர் இனத்தவரே பூசாரியாக உள்ளார்.

ஒன்னம்மாள் தொட்டராயர் கோவில் பொம்மையாசாமி கோவில் அனுப்பர்கள் மட்டும் வழிபடும் கோவில் உள்ளது. இத்தெருவில் அப்போது ஒரே மொழி கன்னடம் மட்டும் தான் ஏனென்றால் அனுப்பர் மட்டுமே வாழ்ந்தார்கள்.

காலம் செல்ல செல்ல ஒவ்வொரு இனத்தவராக இவ்வூருக்கு குடி புகுந்தனர் இப்போது அனைத்து சமுகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வூர் இப்போது ஊத்துப்பட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அனுப்பர்கள் வாழும் தெருவின் பெயர் இன்றும் கவுண்டன்பட்டி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி திங்கள் அன்று அனுப்பர்கள் ஒன்னம்மாள் தொட்டராயர் கோவில் திருவிழா கொண்டாடி வருகிறார்கள்.

ஊரே அடங்கிய பிறகு நடு இரவில் தான் வழிபாடு நடக்கும் இவ்வூரில் அனுப்பர்கள் நமது பாரம்பரியம் மாறாமல் அதே உருமி ,மேளம் ,நடுகல் வழக்கம், குண்ணிமுத்து, கண்டாங்கி சேலை கூடைபூஜை என நமது பாரம்பரியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் கன்னடம் தான் பலருக்கு தெரியவில்லை ஊத்துப்பட்டியை உருவாக்கியவர்கள் அனுப்பகவுண்டர்களே, அனுப்பகவுண்டர் வளர்க அல்லிகுலம் பெறுக.

செய்தியாளர் :  அனிதா முரளி