அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்..!

பொள்ளாச்சியில் நியாயவிலைக் கடையில் பணம் கேட்டு தகராறு செய்த தி.மு.க. நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் மகன் கைது -சிறையில் அடைக்க நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சென்றபோது காவல்துறையினரை தாக்கி தப்பிச் சென்றதால் பரபரப்பு.

பொள்ளாச்சி ஜன-22

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள 7-வார்டு உட்பட்ட கோட்டம்பட்டியில் பொள்ளாச்சி நகராட்சியின் தி.மு.க .வின்முன்னாள் நகர மன்ற உறுப்பினராக இருந்தவர் ஜெகநாதன்,இவரது மகன்

இவர் இன்று கோட்டாம்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று அங்கிருந்த ஊழியர் பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்,

ஆனால் நியாய விலை கடை ஊழியர் பாலகிருஷ்ணன் பணம் தர மறுத்ததால் கிருஷ்ணகுமார் அடிதடி ரகளையில் ஈடுபட்டுள்ளார்,

இதைத்தொடர்ந்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரை கைது செய்து சென்றனர்,

கைது செய்த கிருஷ்ணகுமாரை மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துசிறையிலடைக்க இன்று இரவு பொள்ளாச்சியில் உள்ள நீதிபதி JM 2 அவரது வீட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்,

நீதிபதி வீட்டில் காவல்துறை பாதுகாப்போடு நின்று கொண்டிருந்த போது கிருஷ்ணகுமார் திடீரென காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமாரை தாக்கிவிட்டு சுவரேறி தப்பி சென்றார்,

இதில் சுதாரித்த காவல்துறையினர் அவரை விரட்டி சுற்றி வளத்து மடக்கிப் பிடித்தனர், இதையடுத்து அவரை மீண்டும் கைது செய்த போலீசார் அரசு தலைமை மருத்துவ மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துநீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்

இதைத்தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார், இவர் சில மாதங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் வங்கியின் உள்ள பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார்.

இவர் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்கோர்ட்டு பினையை பெற்று இருப்பதுகுறிப்பிடத்தக்கது.