நான்காம் தூண்

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறை இப்போது கொள்ளையர்களின் ௯டாரமாக மாறி வருவதாக ௯றினார் மூத்த பத்திரிகையாளர்.

யாகம் போல பத்திரிகையைத் துறையை தேர்ந்தெடுத்து வந்தோம். பலமுறை கொலை முயற்சியில் இருந்து தப்பித்து,உண்மையை மட்டுமே உரக்கச் சொன்னோம்.

அச்சுத்துறை கடந்து காட்சி ஊடகமாக வந்தபோது,பணம் படைத்தவர்களும்,அரசியல்வாதிகளும் ஊடகத்துறையை ஆக்ரமித்தனர்.

இன்றோ…எழுத்து விபச்சாரமும்,மிரட்டல் கலாச்சாரமும் பெருகிவிட்டது. இப்போதெல்லாம், பத்திரிகையாளர் என்று சொல்வற்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

பெரிய ஊடகங்கள் நித்யானந்தா போன்றவர்களையும், புற்றீசலாக புறப்படும் சின்ன ஊடகங்கள் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் நிலையை கண்௯டாக காண முடிகிறது.

பிரபல உணவுக் கடையில் நடந்த தவறை வைத்து மிரட்டியே,தனது ஊடகத்திற்கு விளம்பரம் பெற்று கொண்டது சுந்தரமான ஒருவரின் சேனல்.

இப்போது…வருமானவரித்துறை கவனம் செலுத்த வேண்டிய இடம் பத்திரியாளர்களின் வீடுகள் தான். அவர்களின் சொத்து விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதும் அவசியம்.

இன்றும்…நேர்மையோடும்,குடியிருக்க வீடு ௯ட இல்லாது வாழ்ந்து வரும் உண்மையான பத்திரிகையாளருக்கு இந்த செய்தி சமர்பணம்.