சாமி நடிகர்

சாமி நடிகர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக இருந்து தற்போது வில்லனாக மாறியுள்ள சாமி நடிகர், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

தனக்கு மீண்டும் வாய்ப்புகள் அதிகம் தேடிவர ஆரம்பித்துள்ளதால், சாமி நடிகர் தற்போது தன்னிடம் கதை சொல்ல வருபவர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்கிறாராம்.

அதுஎன்னவென்றால், தன்னிடம் கதை சொல்பவர்கள் அந்த கதையை ஒரே வரியில் சொல்லக்கூடாதாம்.

வசனம் எப்படியிருக்கிறது, திரைக்கதை எப்படி அமைக்கப் போகிறோம் மற்றும் முழு கதையும் அவரிடம் சொல்லவேண்டுமாம்.

அப்படி சொன்ன கதை அவருக்கு பிடித்தால்தான் அதில் நடிக்கவே சம்மதிப்பாராம்.

இதில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றால் உடனே வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிடுவாராம். இவருடைய இந்த நிபந்தனையால் இவருக்கு கதை சொல்லவே பெரும்பாலான இயக்குனர்கள் மிகவும் தயங்குகிறார்களாம்.

நடிகரும் கிடைத்த வரைக்கும் வந்தால் போதும் என்பதுபோல் தன்னுடைய நிபந்தனையில் எந்த மாற்றமும் செய்து கொள்ளவில்லையாம்.