மந்தனா,மிதாலி ராஜ் அதிரடி : வெற்றி பெற்ற பெண்கள் அணி..!

ஆண்கள் அணியை தொடர்ந்து நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணத்தை இந்திய ஆண்கள் அணி மேற்கொண்டுள்ள நிலையில், பெண்கள் அணியும் நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக விளையாடி வருகின்றது.

3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் நியூசிலாந்து, இந்திய பெண்கள் அணிகள் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

மந்தனா,மிதாலி ராஜ் அதிரடி :

இன்று நியூசிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது.

நியூசிலாந்து அணி 44.2 ஓவரில் தட்டுத் தடுமாறி 161 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோட்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்க்காமலும், பின்னர் வந்த தீப்தி சர்மா 8 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்து ஏமாற்றினாலும் ,

மற்றொரு தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா 90* மற்றும் மிதாலி ராஜ் 63 ரன்கள் குவிக்க இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

மந்தனா 83 பந்துகளில் ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகள் பறக்கவிட்டு 90 ரன்களை குவித்து கடைசிவரை விக்கெட் இழக்காமல் இருந்தார்.

இதனால் இந்தியா 35.2 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.