அமைச்சர் அண்னன், அத்துமீறல்…!
M.L.A., ஆவேசம்..!

உள்ளாட்சியில் ஊழல் பரபரப்பு பேட்டி

கோவை மாநகராட்சி டெண்டர்களில், முறைகேடுகளில் ஈடுபட்டுவரும் உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் எஸ்.பி.அன்பரசன் அத்துமீறலைக் கண்டித்தும் ,

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டு காலத்திற்குக் கொடுக்கப்பட்ட குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் ,

மாநகராட்சியின் பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும் ,

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் , வருகின்ற 11.03.2020 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் கோவை , டவுன் ஹாலில் உள்ள கோவை மாநகராட்சி அலுவலகம் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பரபரப்பு பேட்டியளித்தார் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் தி.மு.க., பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ….!

செய்தி:-சங்கரமூர்த்தி
                7373141119