அரசு மருத்துவமனைகளில் 353 காலிப்பணியிடங்கள்..!

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில், 353 மருந்தாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளர் பணிக்காக 353 காலிப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

காலியிடங்கள்: 353 (தற்காலிக பணியிடங்கள்). ஆண்கள்- 220 பேர், பெண்கள்- 101 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள்- 18 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்- 14 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊதியம் : மாத சம்பளம்- ரூ. 35,400 முதல் ரூ. 1.12 லட்சம் வரை

கல்வித் தகுதி: பார்மஸி பிரிவில் டிப்ளமோ முடித்து, அதை பார்மஸி கவுன்சலில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு: தமிழக அரசின் மருந்தக பணிக்காக விண்ணப்பிப்பவர்கள், 01 ஜூலை 2019 தேதியின் படி 18 முதல் 30 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பெறுபவர்கள் 57 வயதுடையவர்களாக இருப்பது அவசியம்.

கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300/- விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனவரும் ரூ. 600 கட்டணமாக செலுத்திட வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள்http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf இந்த அறிவிப்பை படித்துப் பார்த்து விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 21. 2019