விருது விற்பனைக்கு

தமிழக அரசின் தமிழ் பண்பாட்டுத்துறை இந்தாண்டுக்கான விருதை அறிவித்துள்ளது.

விருது வழங்கிய விதத்தில் பல வில்லங்கம் ரெக்கை கட்டி பறக்கிறது. மாஃபா பாண்டியராஜனின் சித்து விளையாட்டு அதிமுகவிற்கே ஆப்பு வைக்கிறது.

உலகதமிழாராய்ச்சி மையம் சார்பாக இந்தி மொழி படிக்க நிதி என்று தனது ஆர்எஸ்எஸ் பக்தியை பந்தியிட்டார்.

இப்போது…கனிமொழி உத்தரவு போட, உலகத் தமிழ் சங்க இலக்கிய விருதை திமுகவின் மலேசிய முகமான பெ.ராஜேந்திரனுக்கு வழங்கி உள்ளார் மாஃபா.

அதிமுக ஆட்சியில் திமுக பிரதிநிதியாக தனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தி உள்ளார் மாஃபா. பாஜக விற்கு தலையையும்,திமுக விற்கு காலையும் காட்டுகிறார் மாஃபா.

அதிமுக தொண்டர்கள்

திமுக,விசிக கட்சிகளின் சார்பாக ஆண்டுதோறும் தங்களுக்கு சார்பானவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.ஆனால்…அதிமுக கட்சியோ இதுவரை இதுபோன்று எதையும் செய்ததில்லை.

முத்துலிங்கம்,புலமைபித்தன் போன்ற அதிமுகவின் ஆரம்பகட்ட இலக்கியவாதிகளை பெருமைப்படுத்த எந்த முயற்சியும் கட்சியின் சார்பாக எடுத்ததில்லை என்று அதிமுகவினர் குமுறுகின்றனர்.