ஊடகம் மீது பயங்கரவாதம்

பத்திரிகையாளர் அன்பழகன் இரண்டாவது முறையாக எடப்பாடி அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக,அதிமுக என இரு அரசுகளின் ஊழல் பற்றி புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் முதல்முறையாக கைது செய்யப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவல் உரிமை பெறும் சட்டத்தின் மூலமாக தகவலைப் பெற்று,அதனையே புத்தகமாக வெளியிட்டு வருகிறார்.

செய்திக்கு கைது என்றால்…ஊடக சுதந்திரம் ஊனமாகி விட்டது என்பதே உண்மை.

அரசின் அராஜகத்தை அனைவரும் எதிர்ப்பது அவசியம் ஆகும்.