ஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு...!

12வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த போட்டிகள் மார்ச் 23 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 8 அணிகளும் தங்கள் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளன.

தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

அனைத்து அணிகளும் குறைந்தது 4 போட்டிகளில் விளையாடுகின்றன. பெங்களூரு அணி மட்டும் 5 போட்டிகளில் விளையாடுகிறது.

எல்லா அணிகளும் குறைந்தது 2 போட்டிகள் சொந்த மைதானத்திலும் 2 போட்டிகள் வேறு மைதானத்திலும் விளையாடுகிறது.

டெல்லி அணி மட்டும் 3 போட்டிகளை சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. பெங்களூரு அணி 3 போட்டிகள் வேறு மைதானத்தில் விளையாடுகிறது.

மக்களவைத் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக முதல் 17 போட்டிகளின் அட்டவணை மட்டும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது