சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்..!

சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்..!

அணு ஆயுதத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதன் பரவலை தடுக்க வலியுறுத்தி ஐ.நா, சார்பில், சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்..!

ஆகஸ்ட் 29ம் தேதி, சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதே நேரத்தில் அணு ஆயுதத்தின் தவறான வழிகளில் பயன்படுத்துவதால்,

மக்களின் உடல்நிலை, சுகாதரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை முற்றிலும் தடுப்பதே இத்தினத்தின் நோக்கம்.

1945ல் தான், அணு ஆயுதத்தின் கொடூரம் உலகுக்கு தெரிந்தது.

2ம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய 2 நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது.

இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதலாக அமைந்தது.

1945 ஆக., 6ல் “லிட்டில்பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த “பி-29 ரக எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம்,

ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது.

3 நாள் கழித்து, ஆகஸ்ட் 9ல், மற்றொரு நாகசாகி நகரின் மீது “பேட்மேன்’ என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது.

இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலும் நிலைகுலைந்தன.

கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

உலகில் தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான்,

வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் அணு ஆயுத சோதனை நடத்தி, தங்களை ஆணு ஆயத நாடாக நிலைநிறுத்தியுள்ளன.

உலகளவில் 1945க்கு பின், இதுவரை 2000 முறை அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் நாடுகளுக்கிடையே பதட்டமும் ஏற்படுகிறது.

அணுவை ஆக்கபூர்வ வழிகளில் பயன்படுத்த அனைத்து நாடுகளும் முன்வரவேண்டும். அப்போதுதான் அணு ஆயுதம் இல்லா உலகம் அமையும்.

இதனை வலியுறுத்தவே ஆண்டு தோறும் இந்த சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தகவல்கள்: ரோகிணி