நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் இலக்கு..!

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் இலக்கு..!

நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இத்தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்றுமவுண்ட் மாங்கனுயில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், சாண்டனருக்கு பதில் சோதி சேர்க்கப்பட்டார். சவுத்திக்கு பதிலாக கிராண்ட்ஹோமே அணியில் இடம் பெற்றார்.

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன் குவித்தது.

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.