நாக்கு...! நமது ஆரோக்கியம் நம் கையில்...! (4)

நாக்கின் சேவை நமது உடலுக்கு தேவை…!

நாக்கு மட்டும் இல்லையெனில் நம்மால் பேசவும் இயலாது, உணவின் சுவையை உணரவும் முடியாது .

ஏன் மூச்சு விடுவது கூட சிரமம்தான்.  நா காக்க வேண்டும் காக்கா விட்டால்….?

பல இன்னல்களை சந்தித்து சித்தரவதை அனுபவிக்க வேண்டும்…!

இது வரலாறு கூறும் உண்மை….!
இதில் பல அந்தரங்க அர்த்தங்கள் உள்ளன.

நாக்கை பற்றி நாம் தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் பல நோய்களின் அறிகுறிகள் முதலில் நாக்கில்தான் தெரிய ஆரம்பிக்கும்.

நாக்கில் சிறிய மாற்றம் தெரிந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.

ஆணிகளின் நாக்கை வீண
பெண்ணின் நாக்கு சற்று சிறியது என்றாலும்…!?!?!?

நமது நாக்கில் 2000 முதல் 4000 வரை சுவைமொட்டுகள் இருக்கின்றன.

இந்த சுவை மொட்டுகளில் உள்ள சுவையை உணரக்கூடிய செல்கள் ஒவ்வொரு வாரமும் அழிந்து மீண்டும் புதிய செல்கள் உருவாகின்றன.

மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் “சூப்பர்டேஸ்ட்டர்ஸ்” களாக இருக்கிறார்கள்.

அதாவது இவர்கள் நாக்கில் கிட்டத்தட்ட 10000 சுவைமொட்டுகள் இருக்கும். சிலர் “நான்டேஸ்ட்டர்ஸ்” என்று அளிக்கப்படுகிறார்கள்,

காரணம் அவர்கள் நாக்கில் சராசரியை விட குறைவான சுவை மொட்டுகளே இருக்கும். பெரும்பாலும் இவர்களால் கசப்பு சுவையை உணர முடியாது.

நீங்க சூப்பர்டேஸ்ட்டர்ஸா இல்ல நான்டேஸ்ட்டர்சானு நீங்களே சோதிச்சு பாருங்க.

சுவை மொட்டுக்களை பார்க்க முடியாது. சுவை மொட்டுகளை வெறும் கண்களால் பார்க்க இயலாது.

உங்கள் நாக்கில் நீங்கள் பார்க்கும் பிங்க் மற்றும் வெள்ளை நிற சுரப்பிகள் சுவை மொட்டுக்கள் அல்ல அவரை பாபில் என்று அழைக்கப்படும்.

இந்த பாபில்களில் தான் சுவையை உணரக்கூடிய சென்சார்கள் இருக்கும். அதன் திசுக்களில் சராசரியாக ஆறு சுவைகளை உணரும் சுவைமொட்டுகள் இருக்கின்றன.

இந்த திசுக்களில் பாபில் திசுக்களில் மூன்று வகை இருக்கிறது, ஃபங்கிபார்ம், சர்கம்வேலட் மற்றும் ஃபோலியேட்.

இதில் ஃபங்கிபார்ம் தவிர மீதி இரண்டையும் வெறும் கண்களால் பார்க்கலாம்.

அவை இரண்டும் நாக்கு தொண்டையுடன் இணையும் இடத்திற்கு அருகில் இருக்கும்.

நமது நாக்கில் நான்கு சுவை மண்டலங்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருப்போம்.

அவை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் கசப்பு. ஆனால் இது உண்மையல்ல. ஐந்தாவதாக ஒரு சுவை உள்ளது அதுதான் காரச்சுவை.

இந்த ஐந்து சுவைகளுமே நாக்கின் முழுவதும் உணரப்படும்.

நாக்கின் மையப்பகுதியை காட்டிலும் பக்கவாட்டு பகுதிகள் அதிக உணர்ச்சி வாய்ந்தவை, நாக்கின் பின்புறமானது கசப்பு சுவைகளை பெரிதும் உணரும்..!

நாக்குக்கு உடலுக்கு ஒவ்வாதவைகளை அதாவது பிடிக்காதவைகளை.. நாக்குக்கு எச்சரிக்கை செய்து உடனே துப்பி விடும்.

நாம் தான் நாக்கை ஏமாற்றி நமது ஆரோக்கியத்தையும் வாழ்கையையும் கெடுத்து விட்டு வருந்துகிறேன்..!
நமது ஆரோக்கியம் நம் கையில் தானே…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி
7373141119