மாற்றுதிறனாளிகளின் இடஒதுக்கீடு அதிகரிப்பு…!

மாற்றுதிறனாளிகளின் இடஒதுக்கீடு அதிகரிப்பு…!

அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் இடஒதுக்கீட்டை 4 % உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுதிறனாளிகளின் இடஒதுக்கீடு அதிகரிப்பு…!

ஏற்கனவே 3% இட ஒதுக்கீடு இருந்த நிலையில் தற்போது அது 1 % உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான உள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா 1 சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.