மத்திய, மாநில அரசுக்கு அா்ஜீன்சம்பத் கோரிக்கை…!

மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அா்ஜீன்சம்பத்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு…!

1998 – பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் முஸ்லீம் பயங்கரவாத இயக்கங்களால் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 26 இடங்களில் குண்டுகள் வெடித்து 51 பேர் உயிர் பலியாகி 500க்கும் மேர்பட்டோர் உடல் ஊனமுன்றோர்களாகி, சுமார் 5000 கோடிக்கு மேல் பொருட்சேதம் ஏற்பட்டு கோவை மாநகரின் தொழில் மற்றும் வியாபாரம் முழுமையாக முடக்கப்பட்டது.

மீண்டும் கோவையில் இது போன்ற பயங்கரவாதச் செயல் நடைபெற கூடாது என்கிற அடிப்படையில் வரும் பிப்ரவரி 14-2019, செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நாளாக கடைபிடிக்கிறோம்.

கோவை R.S.புரம் தபால் நிலையம் அருகில் குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி பொது மக்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி தீபாஞ்சலி செய்யவுள்ளோம்.

  இதற்காக மேட்டுப்பாளையம் ரோடு அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து மோட்ச தீப ஊர்வலம் நடைபெறும்.

தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் அவர்கள் பகுதியில் மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுசமயத்தில் பின்வரும் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.
கோரிக்கைகள் :

1. தமிழகத்தில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
2. குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது.
3. சிறைச்சாலையில் பரோல் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்.
4. பயங்கரவாத செயல்களை தடுப்பதற்குரிய நவீன கருவிகளை காவல்துறைக்கு வழங்கவேண்டும்.
5. இத்தகைய வழக்குகளில் அரசியல் மற்றும் மதக்கண்ணோட்டத்துடன் செயல் படாமல் காவல் துறைக்கு முழு சுதந்திரம்வழங்க வேண்டும்.
6. கோவை R.S.புரம் தபால் நிலையம் அருகில் குண்டு வெடிப்பில் பலியானோர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும்

என்று தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுப்பு:- சங்கரமூர்த்தி
                                    7373141119