ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி..!

தினகரன் கட்சியில் அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று(டிச.,14) சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக.,வில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, தினகரன் கட்சியில் இணைந்தார்.

பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்கள் பலருடன் சென்று திமுக.,வில் இணைந்துள்ளார்.

ஆரம்பத்தில் திமுக.,வில் தனது அரசியல் வாழ்க்கையை துவக்கிய செந்தில் பாலாஜி, அங்கிருந்து மதிமுக.,விற்கு சென்று,

பிறகு அதிமுக.,வில் இணைந்து ஜெ., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

திமுகவில் இணைவதற்கான பதிவேட்டில் கையெழுத்திட்டு அதனை ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இந்த இணைப்பைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் நடக்கயிருக்கும் மாபெரும் கூட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் முக ஸ்டாலின் இருவரும் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.