பிப்ரவரி 2ம் தேதி, தீ விபத்து நினைவு நாள்

கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் மறைந்த ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது.

அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர்.

இதில் பேருந்துக்குள் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று அப்பாவிமாணவியர் உடல் கருகி உயிரிழந்தனர்.

(அந்தக் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று குற்றம்  சாட்டப்பட்டவர்களும் விடுதலை ஆகி விட்டார்கள்…!)

சரியாக 18 ஆண்டுகள்  கழிந்த நிலையில் அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகள்  எரித்துக் கொலை செய்யப்பட்ட இதே பிப்ரவரி 2 ம் நாளில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

இன்றுடன் 2 ஆண்டுகள் முடிந்தும் விட்டது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப வனமாக இருந்து கற்கோட்டையானது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும் வாய்ப்பு உருவாகி, கடைசி நேரத்தில் கை நழுவி போனது.

அதிசயமே அதிசயிக்கும் ஆயிரம் அற்புதங்கள் நிறைந்த கலைக்கோயில் என்றும் இக்கோயிலை வர்ணிப்பவர்கள் உண்டு.

பக்தர்கள் மட்டுமின்றி தினமும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர்.
பிரமாண்ட தோற்றமுடைய இந்த கோயிலில் கடந்த 2018, பிப்.2ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அதிர வைத்தது.

அரசின் அலட்சியத்தால் எரிந்து போன கோவில் புனரமைப்பு பணி இன்று வரை முடங்கி கிடக்கிறது.
இடிக்கப்பட்ட மண்டப பகுதிகள் அதே நிலையில் தரைமட்டமாக கிடக்கின்றன.

நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி வரலாறு போல்….!?!

மாணவிகளை எரித்ததற்கு நீதி கேட்டு
18 ஆண்டுகள் கழித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதே நாளில் எரிந்தது விபரீதமான ஆச்சரியம் கலந்த உண்மை..!

20 ஆண்டுகளாகியும் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீதி கிடைக்காத அந்த  தீ பயங்கரமும், இந்த கோவில் தீ பயங்கரமும் நீங்கவில்லை.

தொகுப்பு:-சங்கரமூர்த்தி
                      7373141119