திருவனந்தபுரம்: தன்னிடம் அசிங்கமான புகைப்படத்தை காட்டிய இயக்குனருக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் நடிகை சுரபி. மின்னாமினுங்கு படத்திற்காக சிறந்த

நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி.

மலையாள திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று நடிகை பார்வதி மேனன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சுரபி கூறும்போது,

படுக்கை

பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நான் நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.

இயக்குனர்

இயக்குனர் ஒருவர் நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தை காண்பித்து இது போன்ற உடையை நீங்கள் எப்பொழுது அணிந்து நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

மகள்

உங்களின் மகளுக்கு 18 வயது தானே ஆகிறது. புகைப்படத்தில் இருக்கும் இந்த உடை என்னை விட உங்கள் மகள் அணிந்தால் நன்றாக இருக்கும் என அந்த இயக்குனரிடம் கூறினேன்.

அதிர்ச்சி

உங்களின் மகளுக்கு அந்த கவர்ச்சி உடை பொருத்தமாக இருக்கும் என்று நான் கூறுவேன் என அந்த இயக்குனர் எதிர்பார்க்கவில்லை. அப்படியே அதிர்ந்து போய்விட்டார் என்றார் சுரபி.