திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகள் மாநில காவல் துறையிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விவகாரம் தொடா்பான ஆபாச வீடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்த வழக்கில் முதல்நிலை குற்றவாளியான திருநாவுக்கரசை மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க,

கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் மனு தாக்கல் செய்யவுள்ளது.

மேலும், காவல் எடுத்து விசாரிக்கும் முறையீட்டின் படி வழக்கு விசாரணைக்கு வரும் போது குற்றவாளி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அதனால், சிபிசிஐடி போலீசாரின் மனு மீதான விசாரணை நடைபெறும் போது, திருநாவுக்கரசு நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார்

இதற்கிடையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து புகாா் அளிக்க பிரத்யேக தொலைபேசி எண், மின்அஞ்சல் முகவாி தயாா் செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவலில், புகாா் அளிக்க விரும்பும் நபா்கள் 94884 42993 என்ற தொலைபேசி எண்ணிலோ,

[email protected] என்ற மின்அஞ்சல் முகவரி மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.