ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்..!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாஜக மிகப்பெரிய ஊழல் செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டதாக புகார் கூறி வருகின்றனர்.

காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட, அதிக விலைக்கு பாஜக குறைவான ரபேல் விமானங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் தான் சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில்,

* முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 9% பதிலாக பாஜக ஆட்சியில் 2.86% விலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

* 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் உடனடியாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

* இதன்மூலம் இந்தியாவிற்கு 17.08% தொகை மீதமாகி உள்ளது

* கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்த இறுதி விலையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டுள்ளது

* முதல்கட்டமாக 18 ரபேல் போர் விமானங்கள் 5 மாதங்களில் சப்ளை செய்யப்படும் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.