பள்ளி தேர்வுகளை முடிக்க உத்தரவு...!

ஏப்ரல் 12ம் தேதிக்குள் அனைத்து பள்ளி தேர்வுகளையும் நடத்தி முடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 5 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12 ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

6 முதல் 9 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 ம் தேதிக்குள் முழு ஆண்டு தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால் பள்ளி முழு ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களை சனிக்கிழமைகளில் பள்ளி நடத்தி சமன் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.