ஹைதராபாத் :

ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஹைதராபாத் எஃப்சி – பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. 6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 27 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் ஹைதராபாத் எஃப்சி – பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் 2 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்தரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் யாசிருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 37 ஆவது நிமிடத்தில் பெங்களுரு அணியின் ஷெரனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 47 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பர்த்தலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாகிலுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

59 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோசுக்கும். 60 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்சிலோனாவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62 மற்றும் 74 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

82 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் குருதேஜ்க்கும், 87 ஆவது நிமிடத்தில் ராபினுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 2008இல் என்னை தடை செய்யக் காரணமே கோச் கேரி கிர்ஸ்டன் தான்.. அதிர வைத்த முன்னாள் வீரர்! இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ராபின் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் தரப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் பெங்களூரு அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு கோல் அடித்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.