சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

0
181
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Advertisement
Advertisement

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்தற்போது ‘மிஸ்டர் லோக்கல்’என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இவருக்கு நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை எம். ராஜேஷ் இயக்கியிருந்தார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 16வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு  தயாரித்த முதல் படமான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.