புதுடில்லி:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அந்த மாநிலம், இந்தியாவுடன் இணைந்துள்ளது. இந்த நடவடிக்கை திரும்ப பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, மத்திய அரசு நீக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. வழக்குகளை நீதிபதிகள் என்வி ரமணா, எஸ்கே கவுல், ஆர் சுபாஷ்ரெட்டி பிஆர் காவல் மற்றும் சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், காஷ்மீர் எப்படி இந்தியாவுடன் இணைந்தது என்பதை விளக்கியதுடன், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது திரும்ப பெற முடியாது. காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறினார்.