வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு....!!!! நாசமாக போகுது நம்ம ஊரு.....!!!!!

வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு….!!!! நாசமாக போகுது நம்ம நாடு…..!!!!!

வரும் முன் காக்க முடியாது..!! என்ற கொள்கையில் முதலிடம் பிடிக்கும்,வாய்க்கால் மீது வரப்போகுது ரோடு….!!!! நாசமாக போகுது நம்ம ஊரு…..!!!!!

நமது அரசு அதிகாரிகளின் பல..பல.. சாதனைகளில் ஒன்று தான் குறிச்சி குளத்தின் வேதனையும் ஒன்று.

கோவையில் இருந்த பல குளங்களில்  குறிச்சி குளத்தின் விவசாய பாசன பகுதியை அரசு ஆசீர்வாதத்துடன் வீட்டு மனைகளாகி விட்டன.

விவசாயத்தை வீழ்த்திய வீணர்களின் வழி வந்த அறிவாளிகள் தற்போது, அந்த குளத்தின்  வாய்க்கால் மீது சாலை அமைக்க பணி நடந்து வருகிறது.

குறிச்சி குளத்திற்கு தண்ணீர் தரும் வாய்க்கால் சோழர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் மறுவரையறை செய்து தண்ணீர் வருவதற்கு ஏற்றார் போல அதன் அகலத்தை வைத்துள்ளனர் .

70வருடங்களுக்கு முன்பு வருடத்துக்கு சராசரியாக குறைந்தது 200 நாட்கள் தண்ணீர் வந்துள்ளது.

இன்று வருடத்திற்கு 20 நாள் ஆற்றில் தண்ணீர் வருவதே அரிதானது.

தற்போது பருவ மழையை விட புயலால் வரும் மழையே அதிகம் அதனால் ஆற்றில் வரும் வெள்ளம் அதிகமாகி குறைந்த நாளில் வரும் வெள்ளம் அதிக அடர்த்தியுடன் வருகிறது.

வரும் நீரின் கொள்ளளவுக்கு போதுமான அளவு வாய்க்கால்கள் இல்லை. எனவே வாய்க்கால் அகலத்தை அதிகரிக்க வேண்டும்.

தற்போது இருக்கும் வாய்க்கால் அகலம் குறைந்தும் மறுபடியும் துர்வார முடியாதபடியும்,

பட்டா நிலம் வரை 2 மீட்டர் நகர்ந்து தற்போது வாய்க்கால் இருக்கும் இடத்தில் தார் சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது.

                      

1) இதனால் குளத்திற்கு வரும் நீர் திசை மாறி  பட்டா நிலத்திற்கு செல்லும்  அபாயம் உள்ளது.

2) இனி வரும் காலத்தில் வாய்க்காலை அகலப்படுத்த முடியாது.

3) இனி வாய்க்கால் தூர்வார முடியாது

ஒரு பக்கம் சுற்றுச்சுவர் மறுபக்கம் பட்டா நிலம்.

பசுமைக்கு பாடைகட்டி விவசாயத்துக்கு சமாதி கட்டிய அறிவு ஜீவிகளே…!!

நீரின்றி மக்கள் அவதிப்படும் இந்த நிலையில் வறட்சி காலத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நீர் வரும் பாதையை மண்ணால் மூடி,

சாலை அமைப்பது அடுத்த சந்ததிக்கு சமாதி கட்டுவதற்கு சமமாகும் என்பதை ஏன் மறுக்கிறது உங்கள் அகந்தை மனது??

அரசுத்துறை அதிகாரிகளே உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள். நீர் இன்றி அமையாது உங்கள் சந்ததிகளும்…!!!!

செய்திகள்: சங்கரமூர்த்தி, 7373141119

murthy