400 போலீசார் ஒரே நாளில் மாற்றம்..!

400 போலீசார் ஒரே நாளில் மாற்றம்..!

காவல் துறையில், நேற்று ஒரே நாளில், 400 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும், இரண்டாம் மற்றும் முதல் நிலை ஆண் மற்றும் பெண் போலீசார், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.

மாறுதல் கேட்டு,டி.ஜி.பி., அலுவலகத்தில், விண்ணப்ப மனு அளித்து உள்ளனர்.

இதையடுத்து, நேற்று ஒரே நாளில், மாநிலம் முழுவதும், ஆண் மற்றும் பெண் போலீசார், 400 பேருக்கு, பணியிட மாற்றம் வழங்கி,டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

இவர்களுக்கு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என, பல்வேறு மாவட்டங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, மாவட்ட எஸ்.பி.,க்கள், உடனடியாக விடுவிப்பு உத்தரவு அளித்து, அவர்கள் பணியில் சேர்ந்த விபரங்களை, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119