குழந்திகளின் புத்தக சுமையை குறைத்த மாநில அரசு..!

குழந்திகளின் புத்தக சுமையை குறைத்த மாநில அரசு..!

தெலுங்கானாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் கொண்டு வரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.குழந்திகளின் புத்தக சுமையை குறைத்த மாநில அரசு..!

தெலுங்கானாவில் துவக்க பள்ளி மாணவர்கள் 6 முதல் 12 கிலோ வரையிலும், மற்ற வகுப்பு மாணவர்கள் 17 கிலோ வரையிலும் புத்தக சுமை சுமந்து செல்கின்றனர்.

இதனால், மாணவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இதனையடுத்து தெலுங்கானா மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிக்கு மாணவர்கள் கொண்டு வரும் பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகங்கள் கொண்டு வரும் பையின் சுமையானது,

1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 கிலோவையும், 3,4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2-3 கிலோவையும்,

6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 கிலோவையும், 8 மற்றும் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4.5 கிலோவையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 5 கிலோவையும் தாண்டக்கூடாது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. மாணவர்கள் அதிகமாக புத்தகங்கள் சுமந்து செல்வதால் அவர்களின் முதுகு தண்டுவடம் பாதிக்கிறது. முழங்கால் பிரச்னை ஏற்படுகிறது.

இதனால், பள்ளிக்கு எந்த நோட்டு புத்தகங்களை கொண்டு வர வேண்டும். கொண்டு வர தேவையில்லை என்பதை பள்ளிகள், மாணவர்களிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களில் எந்த புத்தகம் மற்றும் நோட்டுகளை கொண்டு வர வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

துவக்க பள்ளி மாணவர்களுக்கு வீட்டுபாடங்கள் கொடுக்கக்கூடாது.

பாடங்களில் அளிக்கப்படும் பயிற்சியானது, அந்த பாடம் முடிந்த உடன் ஆசிரியர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும்.

6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு பாடங்களை குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பாடங்களில் மட்டும் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் பெற்றோர்கள் தரப்பில் மகிழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

செய்திகள்: ரோகிணி