முட்டை வாங்க கடன் வாங்கிய நடிகை

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பாலிவுட் நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க ஃபேஷன் டிசைனரிடம் கடன் வாங்கியுள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நேற்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இன்று வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் செலவுக்கு பணம் இல்லாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகை பிபாஷாவும் செலவுக்கு பணம் இல்லாமல் இருந்துள்ளார்.

முட்டை வாங்க கடன்

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, முட்டை வாங்க ராக்கியிடம் பணம் கடன் வாங்கினேன். என்ன ஒரு நாள் என தெரிவித்துள்ளார். twitter

மேலும் ஹாட்டான சினிமா செய்திகளுக்கு  https://www.facebook.com/tamilcheithigal/ என்ற இனையதளத்தை பார்க்கவும்