புதினா மோர்

42
1067
புதினா மோர்
Advertisement
Advertisement

புதினா மோர்

தேவை:

மோர்     – 1/2 லிட்டர்.
புதினா    – 1/2 கட்டு.  
இஞ்சி     – 10 கிராம்.
மிளகுத் தூள், பெருங்காயத்தூள்,   – 1 ஸ்பூன்.
எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   – தேவைக்கு.
உப்பு     – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ளவும். புதினாவை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொண்டு அதில் மோர், மிளகுத் தூள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு பெருங்காயத்தூள், இஞ்சிச் சாறு சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புதினா மோரில் கொட்டவும். புதினா மோர் தயார்.