மல்யுத்தம் : பஞ்சாப் வெற்றி

71
1146
மல்யுத்தம்
Advertisement
Advertisement

புரோ மல்யுத்தம் லீக் போட்டியில் பஞ்சாப் அணி, 5–2 என, உ.பி., அணியை வென்றது. 

இந்தியாவில் புரோ மல்யுத்தம் லீக் தொடரின் 2வது சீசன் நடக்கிறது.

இதன் லீக் போட்டியில் பஞ்சாப், உ.பி., அணிகள் மோதின. ஆண்கள் 57 கி.கி., எடைப்பிரிவில் உ.பி., வீரர் அமித் குமார் தாகியா, 2–6 என, பஞ்சாப்பின் விளாடிமிரிடம் வீழ்ந்தார். 

இதேபோல, பஞ்சாப்பின் ஜிதேந்திரா (74 கி.கி.,), ஒடுனாயோ (53 கி.கி.,), வாசிலிசா (75 கி.கி.,) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

உ.பி., சார்பில் எலிட்சா (48 கி.கி.,), அமித் தங்கர் (70 கி.கி.,) மட்டும் வென்றனர்.

7 போட்டிகளின் முடிவில், பஞ்சாப் அணி 5–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் பஞ்சாப் அணி 3 வெற்றியுடன் (1 தோல்வி), 6 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

ஜெய்ப்பூர் (4), மும்பை (4), அரியானா (4) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.

டில்லி (0), உ.பி., (0) அணிகள் இன்னும் புள்ளிக்கணக்கைத் துவக்கவில்லை.