கள்ளநோட்டை மாற்ற முயன்ற பட்டதாரி பெண் கைது..!

0
109
கள்ளநோட்டை மாற்ற முயன்ற பட்டதாரி பெண் கைது..!
Advertisement
Advertisement

கடலூர் அருகே ரூ.70 ஆயிரம் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பட்டதாரிப் இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கள்ளநோட்டை மாற்ற முயன்ற பட்டதாரி பெண் கைது..!

கடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள பழக்கடையில் இளம் பெண் ஒருவர் ரூ.2000 கள்ள நோட்டை மாற்ற முயன்றுள்ளார்.

அப்போது கடை உரிமையாளர் அளித்த தகவலை வைத்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அவர் கையில் வைத்திருந்த 70 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளையும், 15 ஏடிஎம் கார்டுகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட இளம் பெண் பரணிகுமாரி உடன் தொடர்புடைய மேலும் பலர் கள்ள நோட்டுகளுடன் கடலூரில் சுற்றித்திரிவது தெரியவந்துள்ளது.

தலைமறைவாக உள்ள அந்த கள்ள நோட்டு கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.