விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு: பாகிஸ்தான்..!

விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு: பாகிஸ்தான்..!
Advertisement
Advertisement

இந்திய விமான படை கமாண்டர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவு எடுப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

பின்னர் அவரை ராஜாங்க ரீதியில் மீட்பதற்கான பணிகளில் இந்தியா ஈடுபடுகிறது. ஜெனீவா விதிகளை மீறி அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தணியும் என்றும் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோனோயில் உள்ள மாநாட்டில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இது குறித்து அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் கூறுகையில்,

விரைவில் அபிநந்தனை விடுவிப்போம் என்றனர். ஆனால் அது எப்போது என தெரியவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நாளிதழான டான் பத்திரிகையில் அபிநந்தன் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அபிநந்தன் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். அவர் விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

ஜெனிவா ஒப்பந்தபடி அபிநந்தனை போர் கைதியாக கருதலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.