அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்- பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு …!

அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்- பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு ...!
Advertisement
Advertisement

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தது. பல்வேறு சர்வதேச நாடுகளும் களம் இறங்கியிருந்தன.

ஜெனீவா விதிகளை மீறி அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தணியும் என்றும் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோனோயில் உள்ள மாநாட்டில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.

இது குறித்து அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் கூறுகையில், விரைவில் அபிநந்தனை விடுவிப்போம் என்றனர். இந்த நிலையில்தான் தற்போது விடுதலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கூட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானழ் பிரதமர் இம்ரான் கான் தயார் நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் அபிநந்தனை நாளை விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நல்லெண்ண நடவடிக்கையின் பேரில், எந்தவித நிபந்தனையுமின்றி அபிநந்தனை நாளை விடுவிக்க தயாராக உள்ளோம். நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம்.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

உலக நாடுகள் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் பணிந்து அபிநந்தனை விடுவிக்க முன்வந்துள்ளது பாகிஸ்தான்.