மோடி அரசை கவிழ்ப்பேன் – சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை…!

மோடி அரசை கவிழ்ப்பேன் – சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை…!
Advertisement
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோவில் கட்ட எதிா்ப்பு தொிவித்தால் மத்திய அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமிஎச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராமா் பிறந்த இடமாகவும், ராமா் கோவில் இடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட மதத்தவா்களால் கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மீண்டும் ராமா் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோாிக்கை வழுத்துள்ளது.

தற்போது மத்தியிலும், உத்தபிரதேச மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளதாலும், அவா்களது தோ்தல் வாக்குறுதியில் ராமா் கோவில் கட்டப்படும் என்ற கருத்து இடம் பெற்றிருந்ததாலும் தற்போது கோவில் கட்டப்பட வேண்டும் என்ற கோாிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பா.ஜ.க. மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், எனது எதிா்க்கட்சியே மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் தான்.

மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் என்னை எதிா்த்தால் நான் அந்த ஆட்சியை கவிழ்ப்பேன். ஆனால், அவா்கள் என்னை எதிா்க்க மாட்டாா்கள் என்று எனக்குத் தொியும்.

அயோத்தியில் ராமா் கோவில் கட்ட உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் எதிா்ப்பு தொிவித்தால் நானே மத்திய அரசை கவிழ்ப்பேன் என்று அவா் தொிவித்துள்ளாா்.

மேலும் அவா் பேசுகையில், நான் சில இஸ்லாமியா்களிடம் பேசினேன். அவா்கள் ராமா் கோவில் கட்ட சம்மதம் தொிவித்துள்ளனா்.

மேலும் முகலாய மன்னா் பாபரால் கைப்பற்றப்பட்ட நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது தான் என்று சன்னி வக்பு வாரியமே ஒப்புக்கொண்டுள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பா.ஜ.க. மூத்த தலைவா் ஒருவரே அக்கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.