ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்…?

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர்...?
Advertisement
Advertisement

ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக காங்., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 200 இடங்களில் காங்., 100 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

காங்., சார்பில் சச்சின் பைலட் மற்றும் அசோக் ஜெலட் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் காங்., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய காங்., எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நேற்று இரவு அசோக் ஜெலட் இல்லத்தில் கூடியது. இதில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து புதிதாக தேர்வாகி உள்ள எம்எல்ஏ.,க்களை கூட்டி இன்று மீண்டும் ஆலோசிக்க காங்., திட்டமிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்பட்டு, கூட்டத்திற்கு பிறகு மாலை 5 மணிக்கு முதல்வர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.