அரசு சார்பில் தகவல் தெரிவிக்கவில்லை” உயிரிழந்த கோவில்பட்டி வீரரின் தந்தை தகவல்..!

0
117
அரசு சார்பில் தகவல் தெரிவிக்கவில்லை” உயிரிழந்த கோவில்பட்டி வீரரின் தந்தை தகவல்..!
Advertisement
Advertisement

காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் சுப்ரமணியன் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

அவர்களில், ஒருவரது உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்துறை அதிகாரிகள் வெளியிட்ட உயிரிழந்த வீரர்கள் பட்டியலில் அவரது பெயர், முகவரி உள்ளது.

ஆனால் தனது மகன் இறந்தது குறித்து எந்த தகவலும், தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும்,

உறுதியான தகவல் தெரியாத காரணத்தினால் குழப்பமான நிலையில் இருப்பதாகவும், அரசு உறுதிப்படுத்துவதற்காக கூற வேண்டும் என்று, சுப்பிரமணியன் தந்தை கணபதி தெரிவித்துள்ளார்.

IIT வரை படித்துள்ள 28 வயதான சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஆர்.பி.எப். போலீசில் சேர்ந்தார்.

உத்திரபிரதேசத்தில் தனது பணியை ஆரம்பித்த சுப்பிரமணியன் சென்னை காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி, என்ற மனைவி உள்ளார். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையி, குழந்தைகள் இல்லை.

தைப்பொங்கலுக்கு விடுமுறைக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த ஞாயிறன்று தான் ஊரிலிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

நேற்று மதியம் 2 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தான் வேலைக்கு செல்வதாக சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்கொலை படைத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.